பஞ்சாப் எல்லையை அச்சுறுத்தும் பாகிஸ்தான் ட்ரோன்கள் - போதை, ஆயுதங்களை கடத்தி வருகிறதா?
பஞ்சாப் எல்லையில் அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலமாக போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வருகின்றன.
பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்கு ஆயுதங்களும், போதைப் பொருட்களும் கடத்தி வரப்படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியில் எதிரொலியாக தற்போது இத்தகைய செயல்களுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பஞ்சாபி ட்ரோன்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது குறிப்பாக 2019-ம் ஆண்டு தான் பஞ்சாபில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுத கடத்தல்களுக்கு இத்தகைய ட்ரோன்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த ஆண்டு மட்டும் பஞ்சாபில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன்கள் சம்பந்தப்பட்ட 150 சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது.
எல்லையை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்பு படை இந்த ஆண்டில் பத்து ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இவற்றில் கடந்த வாரம் மட்டும் மூன்று ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டுள்ளது. ஊடுருவ முயற்சிகளாக ட்ரோன்கள் பல தடவை விரட்டி அடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் உளவுப்படையான ISI ஆதரவு பெற்ற கடத்தல்காரர்கள் அதில் சீனாவின் ட்ரோன்களை பயன்படுத்துகிறார்கள்.
இவற்றில் சத்தம் குறைவாக இருக்கும். மிக அதிக உயரம் பறக்க வல்லவை. இதனால் டோன்களின் பயன்பாடு பாதுகாப்பு படைகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்து இருக்கிறது. ட்ரோன்களை பயன்படுத்துவதை தடுக்க துப்பு கொடுப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் எல்லை பாதுகாப்பு படை அறிவித்தது. மேலும் அந்த ஆயுதங்களையும் போதைப் பொருட்களையும் சேகரித்து வரும் இந்திய கடத்தல் காரர்களை சுடுவது என்று எல்லை பாதுகாப்பு படை கடந்த மாதம் முடிவு செய்தது.
Input & Image courtesy: News