யோகியின் சொந்த ஊரில் தெருக்களுக்கு இஸ்லாமிய பெயர்களை மாற்றி சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் - நகராட்சி நிர்வாகம் அதிரடி
உத்திர பிரதேசத்தில் தெருக்களில் இஸ்லாமிய பெயர்கள் மாற்றப்பட்டு சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்று வருகின்றன.
உத்திர பிரதேசத்தில் தெருக்களில் இஸ்லாமிய பெயர்கள் மாற்றப்பட்டு சுதந்திர போராட்ட தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்று வருகின்றன.
உத்திரபிரதேச முதல்வரின் சொந்த ஊரான கோரக்பூர் நகராட்சியில் உள்ள வார்டுகளை மறு வரையறை செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதன் வாயிலாக வார்டுகளின் எண்ணிக்கை 80'ஆக உயர்ந்துள்ளது, மேலும் பல வார்டுகளின் பெயர்கள் மாற்றப்பட்டு முக்கிய பிரமுகர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இல்லாஹி பாக் வார்டு பந்தூர் சிங் நகர் என்றும், இஸ்மாயில் போர் வார்டு சஹாப் கஞ்ச் எனவும், ஜாப்ரா பஜார் ஆத்ம ராம் நகர் எனவும் மாற்றப்பட்டுள்ளன.
இஸ்லாமிய பெயர்கள் மாற்றி விட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களின் பெயரை வைப்பதால் மக்களுக்கு எளிதில் புரியும் எனவும் உத்தர பிரதேசத அரசின் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இருப்பினும் இதிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.