கடந்த 24 மணி நேரத்தில் நடந்த கொரோனா நிலவரத்தை வெளியிட்ட மத்திய அரசு.!
கடந்த 24 மணி நேரத்தில் 853 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,00,312 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 59,384 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,95,48,302 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 853 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் நிலவரம் பற்றி தினமும் காலை 9 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் புதிதாக 46,617 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு 3,04,58,251 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 853 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,00,312 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 59,384 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,95,48,302 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் 5,09,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் 34,00,76,232 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.