இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,205 பேர் உயிரிழப்பு.. தீவிரமடையும் கொரோனா தொற்று.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 4,205 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-12 04:43 GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 4,205 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்கள், குணமடைந்தவர்கள், மற்றும் உயிரிழந்தவர்கள் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:




 


புதிதாக 3,48,421 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 2,33,40,938 ஆக உயர்ந்தது. புதிதாக 4,205 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழப்பு 2,54,197 ஆக உயர்ந்துள்ளது.




 


அதே போன்று தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,55,338 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,93,82,642 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 37,04,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Similar News