இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு 1 லட்சத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 2,123 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-06-08 05:23 GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 2,123 பேர் உயிரிழந்துள்ளனர்.




 


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி: கடந்த 24 மணி நேரத்தில் 86,498 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 2,89,96,473 ஆக உயர்ந்துள்ளது.




 


அதே போன்று 2,123 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,51,309 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 1,82,282 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 23,61,98,726 ஆக உயர்ந்துள்ளது.

Similar News