9வது நாளாக 70 ஆயிரத்துக்கும் கீழ் சென்ற கொரோனா.. இறப்பு எண்ணிக்கையும் குறைகிறது.. மத்திய சுகாதாரத்துறை தகவல்.!

புதிதாக 2,542 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 3,79,573 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-06-16 04:52 GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 62,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2,542 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையிலான முன்னெச்சரிக்கையை எடுத்து வந்தது. இதனால் தொற்று எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா புதிதாக 62,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,33,105 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 2,542 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 3,79,573 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தொற்றால் 8,65,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 26,19,72,014 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொற்றில் இருந்து அனைவரும் தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு எனவும் கூறியுள்ளது.

Similar News