இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 3,57,630 பேர் டிஸ்சார்ஜ்.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,630 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Update: 2021-05-22 06:25 GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,630 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போன்று 4,194 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக பாதித்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் பட்டிலை தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.




 


அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: நாடு முழுவதும் புதிதாக 2,57,299 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,62,89,290 ஆக உயர்ந்துள்ளது. புதிதா 4,194 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 2,95,525 ஆக உயர்ந்துள்ளது.




 


தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 2,30,70,362 ஆக உயர்ந்துள்ளது.

Similar News