இந்தியாவில் முதன்முறையாக 'பச்சை பூஞ்சை' நோயால் ஒருவர் பாதிப்பு.!
மத்திய பிரதேசம், இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவனையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா சிகிச்சை பெற்று வந்த 34வயதுடைய நபர் ஒருவருக்கு பச்சை பூஞ்சை இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக 34 வயதுடைய நபர் ஒருவர் பச்சை பூஞ்சை நோயால் பாதிப்படைந்துள்ள சம்பவம் விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கத்தால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருப்பு பூஞ்சை நோய் ஒரு புறம் தாக்க தொடங்கியது. இதில் இருந்து மீண்டு வருவதற்குள் தற்போது பச்சை பூஞ்சை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மருத்துவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவனையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா சிகிச்சை பெற்று வந்த 34வயதுடைய நபர் ஒருவருக்கு பச்சை பூஞ்சை இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவரது நுரையீரல் பாதிப்படைந்த பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது, பச்சை பூஞ்சை தாக்கியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது பச்சை பூஞ்சை நோய் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.