மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் சுவடு தெரியாமலாக்கப்பட்ட மின் பற்றாக்குறை - கடந்த 6 ஆண்டுகளில் நடந்த அபார மாற்றம்!

India has Made Massive gains in nationwide Power Supply in Last 6 Years

Update: 2021-11-09 11:46 GMT

கிராமப்புறங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி திட்டம் 2015 ஜூலை 25 அன்று கொண்டுவரப்பட்டது. நகர்ப்புறங்களில் உள்ள மின் உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்புவதற்காக 2014 நவம்பர் 20 அன்று ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் அன்று கொண்டு வரப்பட்டது.

பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் (சௌபாக்யா) திட்டம் 2017 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையை இது கொண்டிருந்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான வீடுகளுக்கு மின்சார இணைப்புகளை வழங்க முடிந்தது.

2007-08-ல் இந்தியாவில் பெரியளவில் மின் பற்றாக்குறை (-16.6%) நிலவியது. 2011-12-ல் கூட -10.6% ஆக இருந்தது. அரசின் பல்முனை, விரிவான மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளின் மூலம், கடந்த 3 ஆண்டுகளில், இந்தப் பற்றாக்குறை கிட்டத்தட்ட பூர்த்தி செய்யப்பட்டு,- 2020-21-ல் 4%, 2019-20-ல் 7% மற்றும் -2018-19-ல் .8% ஆக இருந்தது.

கடுமையான மின் பற்றாக்குறையிலிருந்து, 1%-க்கும் குறைவான மிகக் குறைந்த பற்றாக்குறையை நோக்கிய இந்த மாற்றம், தற்போதைய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் சாத்தியமானது.

இந்த முயற்சிகளின் விளைவாக, நாட்டின் நிறுவப்பட்ட மின் திறன் அதிகரித்து, கடந்த 7 ஆண்டுகளில் 155377 மெகாவாட் ஆக உள்ளது.





Tags:    

Similar News