100 நாடுகளுக்கும் மேல் இந்தியா தடுப்பூசி கொடுத்து காப்பாற்றியுள்ளது - ஐ.நா'வில் பெருமையுடன் கூறிய ஜெய்சங்கர்

பல மாதங்களாக நீடித்து வரும் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-25 11:36 GMT

பல மாதங்களாக நீடித்து வரும் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச் சபையில் உரை நிகழ்த்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, 'பல மாதங்களாக நடித்து வரும் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா அமைதியின் பக்கம் மட்டுமே இருப்பதாக' தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77வது கூட்டத்தில் இந்தியா சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் உரை நிகழ்த்தினார். அப்போது ரஷியா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியா யார் பக்கம் என்ற கேள்விக்கு 'அமைதியின் பக்கம்' என்பதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்டைநாடுகளுக்கு இந்தியா செய்துவரும் அவசரகால உதவி நடவடிக்கைகளை பட்டியலிட்ட ஜெயசங்கர் கூறியதாவது, ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமை, இலங்கைக்கு 3.8 மில்லியன் டாலர் எரிபொருளுக்கான கடன் உதவி, மியான்மருக்கு பத்தாயிரம் டன் உணவு பொருள் என அண்டைய நாடுகளுக்கு வழங்கிய உதவிகளையும் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வலிமையுடன் திகழ்வதாக சுதந்திர தினத்தில் எடுத்துக்கொண்ட ஐந்து உறுதிமொழிகள் மூலம் அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க உறுதி கொண்டிருப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Source - Polimer News

Similar News