கொரோனா சமயத்தில் இந்தியா 150 நாடுகளுக்கு உதவி செய்துள்ளது: திருப்பதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி.!
மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதன் பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பியூஷ் கோயல், கொரோனா பேரிடர் நேரத்தில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நமது நாடு, மிக வேகமாக மீண்டு வருகிறது.
அதே நேரத்தில் கொரோனா தொற்றின்போது நமது நாடு மற்ற நாட்டு உதவிகளை கோரவில்லை, மாற்றாக வெளிநாடுகளுக்கு நாம் உதவி செய்துள்ளோம். உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக எண்ணி பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். கொரோனா பேரிடர் நேரத்தில் சுமார் 150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் 75 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை நாம் அளித்துள்ளோம்.
தற்போது நாட்டில் 80 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.