உலகின் சக்தி வாய்ந்த நாடக இந்தியா உயர்ந்து வருகிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா வலிமை வாய்ந்த நாடாக மாறி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா வலிமை வாய்ந்த நாடாக மாறி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் இந்தியா உலகளவில் மிகப்பெரிய வலிமை வந்த நாடாக வளர்ந்து வருவதாகவும் ஆசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக விளங்குவதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெயசங்கர் பராகுவே நாட்டில் அந்நாட்டு அதிபர் மரிட்டோ அபிடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பிராகுவை பொலிரோ அமைச்சர் ஜூலியா சீசரை சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
மிகவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை என ஜெய்சங்கர் தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்தியா வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்த அவர் உலகின் மிகவும் வலிமைமிக்க பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாக தெரிவித்தார்.
பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவை முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்து அவர் உற்பத்தி தொழிலும் இந்தியா சிறப்பாக விளங்குவதாக தெரிவித்தார். உலக அளவில் மிகப்பெரிய வலிமையுடைய சக்தியாக இந்தியா விளங்குவதாக தெரிவித்தார்.