உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாகும் இந்தியா - இங்கிலாந்து நிறுவனம் கணிப்பு

2037 ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடக இந்தியா மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-12-27 04:59 GMT

2037 ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடக இந்தியா மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

2037 ஆண்டுக்குள் பத்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் சராசரியாக 6 சதவீதமாக இருக்கும் எனவும் அதற்கு அடுத்த 9 ஆண்டுகளில் இந்த விகிதம் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில் அதற்கு பிந்தைய 2021-22 ஆம் நிதி ஆண்டில் 8.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்து இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


Source - Polimer

Similar News