கப்பல்களில் துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை - வெற்றிகரமாக செலுத்திய இந்தியா.!
கப்பல்களில் துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை - வெற்றிகரமாக செலுத்திய இந்தியா.!
இந்தியா தன்னுடைய பலத்தை மற்ற நாடுகளுக்கு தெரிவிக்கும் விதமாக 'பிரம்மோஸ்' ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணை யானது எதிரி நாட்டுக் கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ரஷ்யாவுடன் இணைந்து நிலம், விமானம், கப்பல், நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றில் இருந்து ஏவக்கூடிய, ‘பிரமோஸ்’ ஏவுகணைகளை, நாம் உருவாக்கி வருகிறோம். ஒலியை விட மூன்று மடங்கு அதிக வேகம் மற்றும் செயல்திறன் உடைய இந்த ஏவுகணைகளின் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்தியா, ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை, உலகின் மிக அதிவேக சூப்பர் சானிக் ஏவுகணையாக கருதப்படுகிறது. கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை INS ரன்விஜய் கப்பலில் இருந்து செலுத்தி கடற்படை பரிசோதித்துள்ளது. இந்நிலையில், 300 கிலோ மீட்டர் தாக்குதல் இலக்கை கொண்ட பிரமோஸ் ஏவுகணை, வங்காள விரிகுடா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதனை நடத்தி முடிக்கப்பட்டது. கடலில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பலை, ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.