இந்தியாவில் ஒரே நாளில் 69.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போட்டு மாபெரும் சாதனை.!
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதில் பிரதமர் பெரும் பங்காற்றி வருகிறார்.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஒரே வழி அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை தடுப்பூசி போடும் பணிகள் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் பிரதமர் மோடி நேரடியாக கண்காணித்து வருகிறார். நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதில் பிரதமர் பெரும் பங்காற்றி வருகிறார். மற்ற உலக நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம் பேருக்கு குறைந்த நாட்களில் 20 கோடிக்கும் அதிகமனோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 12 லட்சம் பேருக்கும், கர்நாடகாவில் 8.7 லட்சம் பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 5.8 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது. அதே போன்று மற்ற மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.