தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா புதிய சகாப்தம் - பிரதமர் பெருமிதம்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சத்யா நாதெள்ளாவுடன் பிரதமர் சந்திப்பு.

Update: 2023-01-07 04:42 GMT

மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சத்யா நாதெள்ளாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் முன்னேற்றங்கள் தொழில்நுட்பம் தலைமையிலான வளர்ச்சியில் சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியா இது போன்ற பல்வேறு சாதனைகளை ஏற்படுவதற்கு தன்னுடைய தரப்பில் இருந்து பாராட்டுக்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறார்.


இது குறித்து பிரதமர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், "உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் முன்னேற்றங்கள் தொழில்நுட்பம் தலைமையிலான வளர்ச்சியில் சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. புவியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திறனுடனான சிந்தனைகள் நமது இளைஞர்களிடம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்தியாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து புதிய ஒரு ஒப்பந்தத்தை தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடப்பட்டது. இந்திய இஸ்ரோ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூலம் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News