100 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு என்ற இமாலய இலக்கை விரைவில் எட்டப்போகும் இந்தியா - மத்திய அரசு அறிவிப்பு

அந்நிய நேரடி முதலீடு 100 மில்லியன் டாலரை தொடும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Update: 2022-09-25 11:38 GMT

அந்நிய நேரடி முதலீடு 100 மில்லியன் டாலரை தொடும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுளதாவது, கடந்த 2021 22 ஆம் நிதியாண்டில் 83 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு பதிவாகி இருந்தது. கடந்த நிதியாண்டில் 101 நாடுகளில் இருந்து வந்த அந்நிய நேரடி முதலீடு 31 யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் 57 துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எளிதாக தொடர்பு செய்ய ஏற்ற நாடாக இந்தியா விளங்குவதால் நடப்பு நிதி ஆண்டில் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு ஈர்க்கும் பாதையில் இந்தியா உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Dinamalar 

Similar News