இந்திய-சீன எல்லையில் அதிரடி ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய ராணுவம்

சீனாவுக்கு இந்தியா பதிலடி தரும் விதமாக நவீன மயமாகிறது ராணுவம்.

Update: 2022-08-17 14:58 GMT

சீனாவுக்கு இந்தியா பதிலடி தரும் விதமாக நவீன மயமாகிறது ராணுவம்.


இந்திய சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது இந்த சூழலில் இந்திய ராணுவம் தாக்குதல் ஒத்திகை நடத்தியது. லடாக்கில் எல்லை கட்டுப்பட்டு கோடு அருகே அமைந்த அமைந்த பாங்காங் ஏரியில் பாதி இந்தியா வசமும், மீதி சீனா வசமும் உள்ளது. ராணுவத்திற்கு புதிதாக வழங்கப்பட்ட இந்த நவீன தாக்குதல் படகில் ஒரே நேரத்தில் 35 வீரர்கள் பயணிக்கலாம், ஏரியின் எந்த பகுதியில் துரிதமாக சென்றடையலாம் இதற்கான ஒத்திகை நேற்று வீரர்கள் ஈடுபட்டனர்.

இது தவிர உள்நாட்டில் தயாரான ஆளில்லா ட்ரான் விமானம் போர் வாகனங்களும் ராணுவத்திலும் வழங்கப்பட்டன. 'எஃப் இன்சாஸ்' எதிர்கால தலைமுறை வீடுகளுக்கான அமைப்பை ராணுவத்திடம் அளிக்கும் நிகழ்ச்சியில் டெல்லியில் நேற்று நடந்தது இதன்படி ரஷ்யாவுடன் தயாரிக்கப்பட்ட ஏகே 203 ரக துப்பாக்கி, பாலிஸ்ட்டி ரக தலைக்கவசம், துப்பாக்கி குண்டு துளைக்காத ஆடை வீரர்களுக்கு வழங்கப்படும்.



தலைக்கவசத்தில் 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் வசதி, இரவு நேரத்தில் துல்லியமாக பார்க்க உதவும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் என பாதுகாப்பு துறை குறிப்பிட்டுள்ளது. 


Source - Dinamalar

Similar News