இந்தியாவை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.. கொரோனா 3.0 எச்சரிக்கை செய்த இந்திய மருத்துவ சங்கம்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முதல் அலை முடிவுற்று இரண்டாவது அலை தொடங்கி இன்னும் முடிவு பெறாத நிலையில் தற்போது மூன்றாம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முதல் அலை முடிவுற்று இரண்டாவது அலை தொடங்கி இன்னும் முடிவு பெறாத நிலையில் தற்போது மூன்றாம் அலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க தற்போது முககவசம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வழிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் முறையாக கடைப்பிடிக்க பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா, பிரேசிலில் கொரோனா பாதிப்பு திடீரென உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்தான் கொரோனா வைரஸ் தொற்றின் 3-து அலை இந்தியாவை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.
இதனால் சுற்றுலா தலங்கள், யாத்திரைகள் உள்ளிட்டவைகளுக்கு ஆனுமதி அளிக்க வேண்டாம் எனவும் மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.