இந்தியாவின் முயற்சி - 1 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா நடவடிக்கை

அமெரிக்கா செல்ல ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களுக்கு பணி விசா வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2022-10-15 12:40 GMT

அமெரிக்கா செல்ல ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களுக்கு பணி விசா வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்கா செல்ல விண்ணப்பித்து காத்திருக்கும் பல லட்சம் இந்தியர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் ஒரு லட்சம் H&L விசாக்களை இந்தியாவின் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. அண்மையில் இந்தியா வந்த வெளியுறவு அமைச்சர் ஆண்டனி லிங்கன் தலைமையிலான அமெரிக்க குழுவினருடன் பேச்சு நடத்திய நமது வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொழில் ரீதியான விசாக்களுக்கு காத்திருப்பு காலம் மாத கணக்கில் ஆண்டு கணக்கில் ஆகிறது என்பதை குறிப்பிட்டார்.

மேலும் 2022 ஜனவரி முதல் 9 மாதங்களில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விசாக்கள் பரிசளிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு தொழில் ரீதியான விசா வழங்கப்பட்டிருப்பதாக அனுமதிக்க அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.



Source - Polimer News

Similar News