இந்தியாவின் முதல் சூரிய மின்னாற்றலால் இயங்கும் கிராமம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
பிரதமர் மோடி இன்று முதல் மூன்று நாட்கள் குஜராத்துக்கு பயணம் செல்ல இருக்கிறார்.
பிரதமர் மோடி இன்று முதல் மூன்று நாட்கள் குஜராத்துக்கு பயணம் செல்ல இருக்கிறார்.
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு என்று செல்கிறார். இந்தியாவின் முதல் சூரியன் மின்னாற்றல் கிராமம் உள்ளிட்ட 14,500 கோடி ரூபாய் மதிப்புடைய பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.
3 நாள் பயணமாக இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி இன்று மாலை நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் சூரியன் மின்னாற்றலால் இயங்கும் கிராமத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தொடர்ந்து இன்று இரவு மோதேஸ்வரி கோவில் மற்றும் சூரியன் கோவிலும் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளார். இரவு நேரத்தில் பின்னணி இசை உடன் வண்ண விளக்குகளால் சூரியன் கோவில் ஜொலிக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டது.
நாளை காலை நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி.