ஹூப்ளியில் விமானம் தரையிறங்கிய போது டயர் வெடித்து விபத்து.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்.!
கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து இண்டிகோ விமானம் திங்கட்கிழமை கர்நாடக மாநிலம், ஹூப்ளிக்கு சென்றது. அப்போது விமானம் ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது டயர் வெடித்து விபத்து நேரிட்டுள்ளது.
கண்ணூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்குச் சென்ற விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து இண்டிகோ விமானம் திங்கட்கிழமை கர்நாடக மாநிலம், ஹூப்ளிக்கு சென்றது. அப்போது விமானம் ஹூப்ளி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது டயர் வெடித்து விபத்து நேரிட்டுள்ளது.
இதனிடையே விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.