பார்களுக்கான டெண்டர் வழங்குவதில் முறைகேடு - டெல்லி துணை முதல்வரின் வீட்டில் சி.பி.ஐ அதிரடி ரெய்டு
மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடுகள் ஏற்பட்டதாக டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவிற்கு சொந்தமான இடங்களில் இன்று சி.பி.ஐ சோதனையில் ஈடுபட்டது.
மது கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடுகள் ஏற்பட்டதாக டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவிற்கு சொந்தமான இடங்களில் இன்று சி.பி.ஐ சோதனையில் ஈடுபட்டது.
டெல்லியில் துணை முதலமைச்சரான மனிஷ் சிசோடியாவின் இல்லம் உள்ளது, அங்கு மற்றும் அவருக்கு தொடர்புடைய பத்துக்கு மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ சோதனை மேற்கொண்டு வருகின்றது. டெல்லியில் அரசு கொண்டுவந்த புதிய மது கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக சி.பி.ஐ தரப்பு தெரிவித்துள்ளது.
மதுபான நிறுவனங்கள், பார்களுக்கு வழங்கிய டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ இந்த சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.