இஸ்லாமிய பெண்களுக்கு குறிப்பிட்ட எல்லை உண்டு, எல்லார் முன்னிலையிலும் அவர்கள் வரக்கூடாது - பெண்களுக்கு முட்டுக்கட்டை போடும் இஸ்லாமிய மதகுரு

'இஸ்லாமிய பெண்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்க வேண்டுமா? இஸ்லாமிய ஆண்களே இல்லையா' என மதகுரு சபீர் அகமது சித்திக் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-12-05 14:23 GMT

'இஸ்லாமிய பெண்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்க வேண்டுமா? இஸ்லாமிய ஆண்களே இல்லையா' என மதகுரு சபீர் அகமது சித்திக் பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற வருகிறது, முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து நிலையில் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் அகமதாபாத் ஜமா மசூதியின் தலைமை மதகுரு சபீர் அகமது சித்திக்கிடம் இஸ்லாம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்து மதகுரு, 'இஸ்லாத்தை பற்றி பேசினால் இந்த மதத்தில் தொழுகையை விட முக்கியமானது எதுவும் இல்லை. ஆனால் பெண்கள் மசூதியில் தொழுகையை கடைபிடிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? முஸ்லிம் பெண்கள் அனைவரின் முன்னிலையில் வருவது சரி என்றால் அவர்கள் மசூதிக்கு வருவதை தடை விதித்திருக்க மாட்டார்கள். எனவே பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு அதனால் தான் அவர்கள் மசூதிக்கு தொழுகைக்காக வருவதை தவிர்த்து இருக்கிறார்கள்.

அதனால் தான் சொல்கிறேன் இஸ்லாமிய பெண்களுக்கு தேர்தல் சீட் கொடுப்பவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்கிறார்கள். பெண்களுக்கு தான் சீட்டு கொடுக்க வேண்டுமா முஸ்லிம் ஆண்களே இல்லையா? இது எங்கள் மதத்தை பலவீனப்படுத்துகிறது. பெண்களை எம்.எல்.ஏ, கவுன்சிலர் ஆக்கினால் ஹிஜாபை நாங்கள் கடைபிடிக்க முடியாது. மேலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும், எனவே நான் அதை கடுமையாக எதிர்க்கிறேன்' என இஸ்லாமிய மதகுரு பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



Source - Junior Vikatan 

Similar News