கூகுலுடன் இணைந்து மலிவு விலையில் ஜியோ 4 ஜி ஸ்மார்ட்போன்: முகேஷ் அம்பானி தகவல்.!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்றது. இதில் அக்குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் உருவாகியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையில் ஜியோ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்றது. இதில் அக்குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் உருவாகியுள்ள ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்.
இது பற்றி முகேஷ் அம்பானி கூறியதாவது: இந்தியாவில் மிகவும் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். புதிய ஸ்மார்ட்போன் மூலமாக இந்தியாவில் 2 ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அது மட்டுமின்றி நாட்டில் அனைத்து இடங்களிலும் 5ஜி தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.