கர்நாடகாவில் நிலைமை கை மீறிவிட்டது.. முதலமைச்சர் எடியூரப்பா பரபரப்பு பேட்டி.!
சிகிச்சைக்கு பின்னர் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இன்றுதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளேன்.
கர்நாடகாவில் நிலைமை கை மீறிப்போய்விட்டது என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்பைவிட மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கெடுபிடிகளை போட்டுள்ளது. இருந்த போதிலும் மக்களிடம் போதுமான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா கொரோனா தொற்றில் இருந்து இன்று குணமடைந்து வீடு திரும்பினார்.
இது பற்றி அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சிகிச்சைக்கு பின்னர் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இன்றுதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளேன். குணமடைவதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் அவர் அளித்துள்ள பேட்டியில்: கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று கைமீறி சென்று விட்டது. கொரோனா வைரஸ் தொற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொதுமக்கள் அனைவரிடத்திலும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
தற்போது முதலமைச்சரே இப்படி ஒரு பேட்டி அளித்துள்ளாரே என்று பொதுமக்களிடம் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது மக்கள் சமூக இடைவெளி மற்றும் கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.