கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அதிரடி உத்தரவு.!

நேற்று ஒரே நாளில் 34,000 பேருக்கு தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.9 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2021-04-26 11:21 GMT

கர்நாடகாவில் நாளை இரவு 9.30 மணி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவில் நாளுக்கு கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்களிடம் போதுமான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் தொற்று எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே சென்றது.




 


நேற்று ஒரே நாளில் 34,000 பேருக்கு தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.9 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று மட்டும் 143 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு 14,426 ஆக உயர்ந்துள்ளது.




 


இந்நிலையில், கர்நாடகாவில் இன்று முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது; நாளை இரவு 9.30 மணி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.இந்த முடிவு அமைச்சர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே நாங்கள் எடுத்தோம்.

மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News