கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: அவசரகால நிதியாக ரூ. 267 கோடி வழங்க மத்திய அரசு முடிவு !
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், ரூ. 267 கோடியை அவசர கால நிதியாக விளங்க தற்போது மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மற்ற மாநிலங்களில் குறைந்த வரும் நிலையில், ஆனால் இன்னும் கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் பதிவாகும் பாதிப்புகளில் முக்கால் பங்கு கேரளாவில் மட்டுமே பதிவாகும் சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு, தன்னுடைய மருத்துவ குழுவினை கேரளாவிற்கு அனுப்பி பாதிப்புகளின் எண்ணிக்கையை கண்காணிப்பதற்கும், அங்கு நிலைமையை சரி செய்வதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு கேரளாவிற்கு அவசர கால நிதியை ஒதுக்கியுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேரளாவிற்கு நேற்று சென்றார். அங்கு முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து அவர் சந்தித்து பேசினார். அங்கு நிலைமை கூடிய விரைவில் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
பிறகு பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசுகையில், "கேரளாவில் கொரோனா தொற்று பரவலை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவிற்கு இரண்டாவது அவசர கால நிதியாக 267.35 கோடி வழங்கப்படும். மருந்துகள் தட்டுப்பாட்டை போக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.1 கோடி வழங்கப்பட இருக்கிறது. கேரளத்தில் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 40,000 பேருக்கு மேல் மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கிறது" என்றும் அவர் கூறியிருந்தார்.
Image courtesy:Indian Express