கேரளா உள்ளாட்சி தேர்தல்.. தாமரை சின்னம் வரையும் வருங்கால தூண்கள்.!
கேரளா உள்ளாட்சி தேர்தல்.. தாமரை சின்னம் வரையும் வருங்கால தூண்கள்.!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் பெரும்பாலான பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தத. தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் நாடு பழையபடி திரும்பி வருகிறது.
ஆனாலும் இன்னும் ஒரு சில மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, கேரளாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
கொரோனா அதிகரித்து வந்தாலும் கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்தது. அதன்படி அடுத்த மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அதற்கான தேதியை அறிவித்துள்ளது.
அதன்பின் டிசம்பர் 8-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், டிசம்பர் 10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும், டிசம்பர் 14ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் பள்ளி குழந்தைகள் தாமரை சின்னத்தை சுவரில் வரையும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் ஆர்வமுடன் அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடுவதை காணமுடிகிறது.
விரைவில் கொரோனா முடிவுற்று மீண்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது அனைவரின் பிரார்த்தனையும் கூட. ஆனாலும் வருங்கால இந்தியா இது போன்ற சிறார்களை நம்பிதான் உள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது.