திருமணம் செய்து வைப்பதாக சர்ச்சிக்கு வரவழைத்து மதம்மாற்றும் முயற்சி: சம்மதிக்காத காதல் ஜோடி மீது கொலைவெறித் தாக்குதல்!
கேரளாவில் காதல் திருமணம் செய்த ஜோடிகளை வீட்டிற்கு வரவைத்து அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.;
கேரளாவில் காதல் திருமணம் செய்த ஜோடிகளை வீட்டிற்கு வரவைத்து அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஆனத்தலவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன் கிருஷ்ணா. இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த தீப்தி 22, என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு பேரும் வெவ்வேறான மதங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் பெண் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதன் பின்னர் கடந்த மாதம் அக்டோபர் 31ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி கேள்விப்பட்ட பெண் வீட்டாரின் பெற்றோர்கள் மிதுன் கிருஷ்ணா கடத்திச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகார் பற்றி தெரிந்து கொண்ட காதல் ஜோடி அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை என்று தீப்தி கூறினார். மேலும் தனது காதல் கணவருடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், காதல் ஜோடிகளை அன்பாக பேசி தீப்தியின் சகோதரர் டேனிஷ் வீட்டிற்கு வரவழைத்தார். உங்களுடைய காதலை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் கூறினார். அதற்கு ஒரு நிபந்தனையும் விதித்துள்ளார். அதாவது எங்களின் வழக்கப்படி சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற மிதுன் கிருஷ்ணாவை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாற டேனிஷ் வற்புறுத்தியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத மிதுன் கிருஷ்ணாவை டேனிஷ் கொடுரமாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் காதல் ஜோடியை தாக்கியதாக டேனிஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
Source: Polimer
Image Courtesy: Hindustan Times