உச்சத்தில் கொரோனா ! கேரளாவில் இன்று முழு ஊரடங்கு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 31,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு கேரளாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 31,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு கேரளாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை கடந்த சில மாதங்களாக நீடித்தது. மற்ற மாநிலங்களில் கட்டுக்குள் வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தொற்றின் வேகம் குறையாமல் உச்சத்திலேயே இருந்து வருகிறது.
கடந்த வாரம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு முன்பாக 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை தினசரி பாதிப்பு இருந்தது. ஓணம் பண்டிகைக்கு சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்தது. பொதுமக்கள் கடைக்கு செல்வது மற்றும் வெளியில் கூட்டம் கூட்டமாக சென்று வந்தனர். இதனால் தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த முதலமைச்சர் பினராயி விஜயன் தவறிவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இன்று வாரம் இறுதி நாளான (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கை கேரளா அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காக போலீசார் பேரிகார்டை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Source: Maalaimalar
Image Courtesy: ANI
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/29104041/2963334/Kerala-reimposes-Sunday-lockdown-as-COVID19-cases.vpf