பிரதமரின் மந்திரச் சொல் 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை' நிரூபித்துக் காட்டிய இந்தியா!

பிரதமரின் மந்திர சொல்லான குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆளுமை என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது இந்தியா.

Update: 2022-12-27 03:16 GMT

நேற்று நடைபெற்ற நல்லாட்சி வார நிகழ்வின் நிறைவாக தலைமை உரையை நிகழ்த்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றுதல், பிரதமர் மோடி அரசின் கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் தங்களின் சேவைகளுக்காக "அணுகுவதற்கு சாதகமான அமைச்சகமாக" உருவெடுத்துள்ளது என்றார்.


டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த 8 ஆண்டுகளில் பணியாளர் நலன் மற்றும் பயிற்சி, ஓய்வூதியத் துறை ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அதிக வெளிப்படைத்தன்மையுடன், மிகுந்த பொறுப்புடன், தொழில்நுட்ப வசதியுடன் சிறப்பாக செயல்பட்டு, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கான மந்திரச் சொல்லான "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை " பின்பற்றி வருகிறது. முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிய விதத்தில் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.


மேலும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவப் பொறுப்பு, வரும் ஆண்டுகளில் உலகளாவிய சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீர்வு ஏற்பட முனைப்புடன் செயல்படும் என்றார். மேலும் கூறுகையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான கர்மயோகி இயக்கம் தற்போது மேம்பட்ட நிலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தற்போது மொபைல் செயலி ஏற்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News