புதிதாக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் குறைவு.!
புதிதாக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் குறைவு.!
ஆறு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் தினசரி கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,073 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக, அன்றாட புதிய தொற்று எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்படுகிறது.
தொடர்ந்து 38-வது நாளாக, குணமடைவோர் எண்ணிக்கை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,033 பேர் குணமடைந்துள்ளனர்.
கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,05,265 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.88 சதவீதமாக உள்ளது. இது கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதைக் காட்டுகிறது.
கொவிட் தொற்றில் இருந்து குணமடைவோர் சதவீதம் 92.64 ஆக அதிகரித்துள்ளது. இன்று வரை 79,59,406 பேர் குணமடைந்துள்ளனர். கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் இடையிலான இடைவெளி 74,54,141 ஆக விரிவடைந்துள்ளது.
கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் 78 சதவிதத்தினர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.