'சங்கிகளை ஒழிக்க லஷ்கர்-இ-தொய்பாவை அழைப்போம்' - மங்களூரில் அட்டூழியம்.!
'சங்கிகளை ஒழிக்க லஷ்கர்-இ-தொய்பாவை அழைப்போம்' - மங்களூரில் அட்டூழியம்.!
கர்நாடகாவின் மங்களூரில் ஒரு சுவற்றில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. "சங்கிகளையும், மனுவாதிகளையும் ஒழிக்க லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தலிபான்களை வரவேற்க எங்களை கட்டாயப்படுத்த வேண்டாம்" என்பது தான் அவ்வாசகங்கள்.
இந்த வாசகங்களுக்குக் கீழே "லக்ஷர் வாழ்க" என்ற பொருள் படி லக்ஷர் ஜிந்தாபாத்" என்ற ஹாஷ்டேக் வரையப்பட்டுள்ளது.
2008ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர். அத்தீவிரவாத தாக்குதல்கள் நடந்து பன்னிரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று வரையப்பட்ட இவ்வாசகங்கள் சமூக ஊடகங்களில் மட்டுமன்றி, பொதுமக்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 27ஆம் தேதி அதிகாலை என்று இவை கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர். மங்களூர் சர்கியூட் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில் இவை வரையப்பட்டிருக்கின்றன.
அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அவ்வாசகங்கள் தற்போது மூடப்பட்டு விட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கின்றது.
போலீசார் கூறுகையில், "நாங்கள் இப்போது அதை மூடி விட்டோம். வட்டாரத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் சரி பார்க்கப்படுகின்றன. சாத்தியமான அனைத்து தடயங்களையும் நாங்கள் தேடுகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
Mangaluru: Graffiti supporting terror groups Lashkar-e-Taiba and Taliban seen in Kadri earlier (photo 1 and 2), now covered (photo 3).
— ANI (@ANI) November 27, 2020
"We have covered it now. All CCTV cameras in the locality are being checked. We are looking for all possible clues," says police. #Karnataka pic.twitter.com/H9oOenqFJU
பெயர் தெரியாத சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது, பிரிவு 153 மற்றும் பொது சொத்துக்களை அழிப்பது தொடர்பான பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் தெரிவிக்கின்றனர்.