கெஜ்ஜரிவால் அரசின் மதுபான ஊழல் - வெளியான புது வீடியோ ஆதாரம்

டெல்லி அரசின் மதுபான விற்பனை உரிமை வழங்குவதில் மோசடிகள் குறித்த ஆதாரத்தை பா.ஜ.க தற்போது வெளியிட்டுள்ளது

Update: 2022-09-06 06:18 GMT

டெல்லி அரசின் மதுபான விற்பனை உரிமை வழங்குவதில் மோசடிகள் குறித்த ஆதாரத்தை பா.ஜ.க தற்போது வெளியிட்டுள்ளது இதன் மூலம் முதல்வர் கெஜ்ஜரிவாலின் அனைத்து பொய்களும் வெளிப்பட்டுள்ளன என பா.ஜ.க கூறியுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மீ ஆட்சி நடக்கிறது, இந்த அரசில் மதுபான விற்பனை வழங்குவது தொடர்பான புதிய கொள்கை 2018 ம் ஆண்டு மாநில அரசு வெளியிட்டது அதன்படி தனியாருக்கு உரிமை வழங்கப்படும் எனவும் அறிவித்தது இதில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி துணை கவர்னர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த கொள்கையை கெஜ்ஜரிவால் அரசு கடந்த ஜூன் மாதம் திரும்ப பெற்றது. இந்நிலையில் கலால் துறையை கவனித்து வந்த துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது மதுபான விற்பனை உரிமை வழக்கில் தொடர்பான குற்றச்சாட்டு உள்ள சன்னி மர்வாவின் தந்தை குல்விந்தர் மர்வாவிடம் ரகசிய கேமரா வாயிலாக விசாரிக்கப்பட்டது அப்போது அவர் மோசடிகள் குறித்து கூறியுள்ளார்.

இதன் வாயிலாக கெஜ்ஜரிவால், மனிஷ் சிசோடியா பெயர்கள் வெளிப்பட்டுள்ளன மதுபான மாபியாக்கள் மற்றும் தரகர்கள் வாயிலாக கோடி கணக்கில் கருப்பு பணம் கைமாறியுள்ளது என கூறினார்.


இந்த நிலையில் புதுடெல்லி தலைவர் பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா கூறியுள்ளதாவது, தகவல் அறிமுக உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல் படி தில்லியில் பழைய மதுபான கொள்கையின்படி மாதத்திற்கு 132 லட்சம் லிட்டர் மதுபானம் விற்கப்பட்டுள்ளதன் வாயிலாக 5068 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால் புதிய கொள்கையின்படி மதுபான விற்பனை 245 லிட்டராக உயர்ந்துள்ளது ஆனால் வருவாய், 4465 கோடி குறைந்துள்ளது இதுவே இவர்களின் பித்தலாட்டத்திற்கு ஆதாரம்' என தெரிவித்துள்ளார்.


Source - Dinamalar

Similar News