அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் நிதி அதிகரிப்பு - பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் அதிரடி திட்டம்!

Update: 2022-08-18 06:26 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் 4.5 லட்சம் கோடி ரூபாய், 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால், கடனுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. அவசர கால கடனுதவி திட்டம் அடுத்த ஆண்டு மார்ச்31 வரை செல்லுபடியாகும். இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 வரையில் 3.67 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) வரம்பை அதிகரித்துள்ளது மூலம் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட துறைகள் மீட்சி பெறும். 

Input From: Press Release 

Similar News