மகாராஷ்டிரா: பாலகர் சிவசேனா MP மீது, பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு.!

மகாராஷ்டிரா: பாலகர் சிவசேனா MP மீது, பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு.!

Update: 2020-12-12 17:59 GMT

வெள்ளிக்கிழமை பாலகர் மாவட்டத்தில் உள்ள 38 வயது பெண் உள்ளூர் சிவ சேனா MP ராஜேந்திர காவித் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கைப் பதிவு செய்துள்ளார். காவித் மீரா சாலையில் நடத்திவரும் கேஸ் பணிபுரியும் இந்த பெண் MP பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்த குற்றச் சாட்டானது, மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ரீதியான குற்றச்சாட்டுகளைக் குறைக்கச் சட்டத்தை வலுப்படுத்தி அமைச்சரவையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஒப்புதலளித்த ஒரு நாள் பிறகு வந்துள்ளது. இந்த பெண் அளித்த குற்றச்சாட்டின் பேரில் நயா நகர் காவல்துறை சட்டம் 504 மற்றும் 506 கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

அந்த பெண் அளித்த புகாரில், இவர் வேலைக்குச் சேர்ந்த ஒருவருடத்திற்குப் பிறகு பாலியல் துன்புறுத்தல்கள் தரத் தொடங்கினார் என்று குற்றம் சாட்டியுள்ளார். சில சமயங்களில் பணம் மற்றும் வீடு வழங்கி அணுகியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் மறுத்து பொழுது, காவித்  அவருக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே 2015 டிசம்பர் 10 மற்றும் அக்டோபர் 13 இல் சிவனா தலைவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். தனது மகனின் படிப்பைத் தொடர்வதற்காக இவர் வேலையில் தொடர்ந்திருந்ததாகவும் கூறியுள்ளார். 2003 இல் தனது கணவர் தன்னை விட்டுச் சென்றதை அறிந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்தாக மேலும் கூறினார். 

இருப்பினும் ராஜேந்திர காவித் இந்த குற்றச் சாட்டுகளை மறுத்து, அந்த பெண் பண மோசடியில் வேலையை விட்டு நிறுத்திய பின்பு இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டு அளிப்பதாகக் கூறினார். 

Similar News