ஊரகப்பகுதி வாழ்வாதாரத்துக்கு புத்துயிரூட்டிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.!

ஊரகப்பகுதி வாழ்வாதாரத்துக்கு புத்துயிரூட்டிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.!

Update: 2020-11-20 06:45 GMT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரகப் பகுதி வாழ்வாதாரத்துக்கு புத்துயிரூட்டியுள்ளது. இப்பணிகள், கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பரவுவதைத் தடுக்க, தொழிலாளர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.73,504 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 251 கோடி மனித வேலை நாட்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். 2020-21 பட்ஜெட்டில் இந்தப் பணிகளுக்காக ரூ.61,500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்சார்பு இந்தியா 1.0 திட்டத்தின் கீழ், ரூ.40,000 கோடி கூடுதலாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை, 22.20 கோடி மனித வேலை நாட்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.

வழங்கப்பட்ட 88 லட்சம் வேலை அட்டைகளில் 73 லட்சம் அட்டைதாரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றர். தமிழகத்தில் 90 லட்சம் அட்டைதாரர்கள் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்றால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்தத் திட்டத்தின் ஊதியம் ரூ.254 –ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பாசனத் திட்டங்களுக்கும், கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கும் மக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் ஊரகப்பகுதி பணியாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கி வருவதுடன், நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது. நீர் ஆதாரங்களை வலுப்படுத்துதல், கால்வாய் குளங்களை தூர்வாருதல், இப்போது மியாவாக்கி மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் கிராமப்புற பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் செய்கிறது.

Similar News