விபத்தை தாக்குதல் என மாற்றிக்கூறிய மம்தா பானர்ஜி.. உண்மையை உடைத்த தேர்தல் ஆணையம்.!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை, அன்று நடந்தது விபத்துதான் என்று விசாரணையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-14 12:49 GMT

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை, அன்று நடந்தது விபத்துதான் என்று விசாரணையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்து விட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கோயிலுக்கு முதன் முறையாக சென்றார். அதன் பின்னர் அவர் காருக்கு திரும்பி கொண்டிருந்தபோது, கூட்டம் அதிகமாக இருந்ததாகவும், கார் பக்கத்தில் சென்ற மம்தா பானர்ஜி மீது கார் கதவு மூடியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கால் மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.




 


இதனையடுத்து அன்று மாலையே செய்தியாளர்களிடம் தன்னை யாரோ மர்ம நபர்கள் தாக்கிவிட்டு சென்றனர். இதனால்தான் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது என கூறினார். இவரது பேச்சு மேற்கு வங்கத்தில் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் மற்றும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் காவலர்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.




 


இதன் பின்னர் மம்தா மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறையினரிடம், மாநில தலைமைச் செயலாளரிடமும் விரிவான விசாரணை அறிக்கை அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கேட்டது. இந்த அறிக்கை முடிவின் படி மம்தா மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் விபத்துதான் எனவும் தெரியவந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த சர்ச்சையை பெரிது படுத்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை குற்றம்சாட்டினர்.

ஆனால் தன்னுடைய காரில் தானே விபத்தை ஏற்படுத்திவிட்டு பழியை எதிர்க்கட்சியினர் மீது போடுவது வேடிக்கையாக உள்ளது என அம்மாநில மக்களே குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News