மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் சகோதரர் கொரோனாவால் உயிரிழப்பு.!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் பல மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இறந்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.