மருத்துவ மாணவர் சேர்க்கை - வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரிக்கு இருக்கைகளை பிரித்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களை 50:50 என்ற வீதத்தில் தமிழக அரசு, வேலூர் CMC பிரித்துக் கொள்ள அனுமதி

Update: 2022-08-24 14:12 GMT

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு போக என்று இடங்களை தமிழக அரசும், வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி நிர்வாகம் 50க்கு 50 என்ற விகிதத்தில் சரிபாதியாக பிரித்து கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மருத்துவ படிப்பில் வேலூரில் அமைந்துள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடங்களை போக, மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற பிரிவு மாணவர்களுக்கு இது மறுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இதையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு போக எஞ்சிய 50 சதவீத இடங்களை மாநில ஒதுக்கீட்டின் கீழ் தமிழக அரசும் கல்லூரி நிர்வாகமும் சரிபாதி பிரித்துக்கொண்டு நீட் தேர்வு மெரிட் லிஸ்ட் மற்றும் மாநில சிறுபான்மையினர் பட்டியல் படி அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கல்வி நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அவர்கள் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த விவகாரத்தில் தமிழக அரசும், CMC கல்லூரி நிர்வாகமும் 50க்கு 50 என்ற சரிவிகிதத்தில் முதுநிலை மற்றும் இளநிலை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் சரியானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News