ஆக்ஸிஜன் விவகாரம்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு.!

அனைவருக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Update: 2021-04-22 11:23 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஏராளமானோர்கள் மருத்துவமனைகளில் அமதிக்கப்பட்டுள்ளனர்.

அது போன்று உள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. அனைவருக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.


 



இந்நிலையில், இது போன்ற நேரத்தில் ஆக்ஸிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே அனைவருக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக மத்திய அரசு அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News