அரசு பங்களாவை காலி செய்யாமல் அடம் பிடிக்கும் மெகபூபா முப்தி - விதிக்கப்பட்டது 24 மணி நேர கேடு
24 மணி நேரத்தில் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.;
24 மணி நேரத்தில் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் கடந்த மாதம் ஸ்ரீ நகரிலிருந்து முதலமைச்சர் இல்லத்தை காலி செய்யுமாறு மெகபூபாவிற்கு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை பொருட்படுத்தாது அவர் தான் கடைசியாக வெற்றி பெற்ற அரசு பங்களாவில் தங்கி வந்தார். தற்போது அவருக்கு மீண்டும் குடியிருக்கும் அரசு பங்களாவை 24 மணி நேரத்தில் காலி செய்ய வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.