68,000 பழங்குடிகிராமங்களில் வீட்டிற்கு வீடு காசநோய் சோதனை - முன்னெச்சரிக்கையாக கொண்டுவரப்படும் திட்டம்!

Update: 2022-08-29 11:18 GMT

இந்தியாவின் 174 பழங்குடி மாவட்டங்களில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்காக பழங்குடி காசநோய் முன்முயற்சியின் கீழ் இந்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி ஆஷ்வசன் பிரச்சாரம் மகாராஷ்டிராவின் நந்தர்பார் மாவட்டத்தில் தொடங்கியது.

இதன்படி 68,019 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று காச நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டது. 1,03,07,200 பேரிடம் வாய்மொழியாக நடத்தப்பட்ட சோதனையில் 3,82,811 பேருக்கு காசநோய் இருக்கக்கூடும் என்று அனுமானிக்கப்பட்டது.

இவர்களுள் 2,79,329 பேரின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 9,971 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

தேசிய மாநாட்டில் பேசிய மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை செயலாளர் நவல்ஜீத் கபூர், பழங்குடி மக்களின் தலைவர்கள், பழங்குடி மருத்துவர்கள், சுய உதவிக் குழுக்கள், பழங்குடி பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் உட்பட 2 லட்சம் பேர் இந்த பிரச்சாரத்தில் அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொண்டதாக குறிப்பிட்டார்.

இதர மக்களுடன் ஒப்பிடுகையில் பழங்குடி மக்கள், சுவாச நோய்கள் மற்றும் காசநோயால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக கூடிய நிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Input From; The statesmen 

Similar News