மதம் மாற்றும் போலி தொண்டு நிறுவங்களின் மீது மேலும் இறுகிய மத்திய அரசின் பிடி.!
மதம் மாற்றும் போலி தொண்டு நிறுவங்களின் மீது மேலும் இறுகிய மத்திய அரசின் பிடி.!
இனி உண்மையான தொண்டு நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் செயல்பட முடியும், மத வளர்ச்சி என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி வந்து யாரையும் இந்தியாவில் மதம் மாற்ற முடியாது: போலி தொண்டு நிறுவனங்களை முழுமையாக முடக்க மேலும் 2 வித கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது நரேந்திரமோடி அரசு
இந்தியாவில் சென்ற 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி 32ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருந்தன.இவற்றில் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி உதவி பெற்று, அந்த பணத்தைக் கொண்டு தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி இவற்றை கண்காணிக்கவும், முறைப்படுத்தவும், ஒழுங்கீனமான நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்ககை எடுக்கவும் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
போதுமான விவரங்கள் அளிக்காத, தவறுகள் செய்த11 ஆயிரத்து 319 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டே உச்சநீதிமன்ற ஆணைப்படி முடக்கியது. மேலும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறைகளில் நன்கொடைகளை பெறவும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் எஃசிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்தில் திருத்தம் செய்ய ஒரு மசோதா ஒன்றை மத்திய இரு மாதங்களுக்கு முன்பாக அரசு தாக்கல் செய்துள்ளது.
அதன்படி நன்கொடைகள் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே வரவேண்டும், என்.ஜி.ஓக்களின் இயக்குனர்கள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக அரசிடம் சேர்க்க வேண்டும்,
மேலும் மொத்த வெளிநாட்டு நிதியில் 20 சதவீதத்துக்கு மேல் நிர்வாக செலவினங்களுக்கு செலவிட முடியாது என புதிய கட்டுப்பாடுகளை திருத்தங்கள் மூலம் வரையறுத்தது.