ராமர் கோவில் கட்டுமான பணி நிதிக்காகப்  பேரணி நடத்திய இந்துக்கள் மீது கல் வீச்சு தாக்குதல்!

ராமர் கோவில் கட்டுமான பணி நிதிக்காகப்  பேரணி நடத்திய இந்துக்கள் மீது கல் வீச்சு தாக்குதல்!

Update: 2020-12-30 07:00 GMT
உத்தரப் பிரதேச மாவட்டம் அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோவில் கட்டுமான பணிக்காக நிதிகளைத் திரட்ட இந்துக்கள் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சில முஸ்லீம் கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். செவ்வாய் அன்று ராமர் கோவில் குறித்து விழிப்புணர்வுகளை நடத்துவதற்காக வாகன பேரணி நடத்தியவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர் அதில் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மத்தியப் பிரதேசம் சாந்தன் கேடி கிராமத்தில் பேரணியை மேற்கொண்டபோது ஒரு குறிப்பிட்ட பகுதியில் நுழைந்த போது அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர் அதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று இந்தோர் ஆட்சியர் மனிஷ் சிங் கூறினார். அதன் பின்னர் அந்த பகுதியில் காவல் படை நிறுத்திவைக்கப்பட்டது என்றும் கூறினார். 

இந்த பேரணியானது பைக் மற்றும் லாரி வைத்து அயோத்தி  ராமர் கோவில் கட்டுமானம் குறித்த விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்டது. "கல் வீச்சு ஐந்து நபர்கள் சிறிய காயங்கள் அடைந்துள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது," சிங் தெரிவித்தார். இதுவரை ஐந்து நபர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார். "அமைதியான பேரணியைச் சீர்குலைக்க முயன்று கல் வீச்சு நடத்தியவர்கள் குறித்துக் கண்டறியப்பட்டு வருகின்றது," என்று கூறி அவர்கள் தேசியப் பாதுகாப்பது சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் மற்றும் சிறையில் அடைக்கப்படுவர் என்று அவர் கூறினார். 

தாக்குதலில் நிலைமை மோசமடைந்தது ஆனால் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது என்று இந்தோர் DIG ஹரிநாராயணச்சாரி மிஸ்ரா கூறினார். மேலும் அந்த பகுதிக்கு உடனடியாக காவல் படை அனுப்பப்பட்டுத் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிந்தது என்று கூறினார்.மேலும் பேரணி நடத்தியவர்களைக் காப்பாற்றப் பேரணி நடத்தியவர்களில் சிலர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களும் பதிலுக்குக் கற்களை வீசினர் என்று காயமடைந்த ஒருவரான பிஹிரு சவுத்ரி கூறினார். 

இதே போன்று டிசம்பர் 25 ராமர் கோவிலுக்கு நிதி திரட்ட பேரணி நடத்தியவர்கள் மீது உஜ்ஜைன் பகுதியில் வைத்து முஸ்லீம் கும்பல் ஒரு வீட்டில் இருந்து கல் வீசி தாக்குதல் நடத்தியது. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அந்த வீட்டை இடித்ததது. 

Similar News