ம பி: உள்ளூர் முஸ்லீம் கும்பலால் குத்தப்பட்டதில் ஆசிரியர் அஜய் முடா பலி.!
ம பி: உள்ளூர் முஸ்லீம் கும்பலால் குத்தப்பட்டதில் ஆசிரியர் அஜய் முடா பலி.!
மத்தியப் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவுக்கு தாமொஹ் பகுதியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கும்பல் இருவரைக் கத்தியால் குத்தியதில் இந்து ஆசிரியர் அஜய் முடா கொல்லப்பட்டுள்ளார் மற்றும் அவரது உறவினர் சுஜீவ் முடா பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவமானது ராஜ் நகர்ப் பகுதியில் நடந்துள்ளது. அறிக்கையின் படி, தாக்கப்பட்ட நபர்கள் இருவரிடம் ஒரு கும்பல் சவால் விட்டது படி கால்நடைகளைக் கடத்தி சென்றுள்ளது. பின்னர் அந்த கும்பல் தங்கள் கூட்டாளிகளுக்கு அழைப்பு விடுத்து இருவரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்குமாறு கூறியுள்ளது.
இருப்பினும் உள்ளூர் காவல்துறை அறிக்கையின் படி, ரியாஸ் குரேஷி மற்றும் விஜய் அஹிர்வேர் இருவரும் அஜய் முடா வீட்டிற்கு வெளியே சிறுநீர் கழித்த போது வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஓடிச் சென்று தங்கள் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு அஜய் மற்றும் சுஜீவை குத்தியுள்ளனர்.
காவல்துறை ரியாஸ், ஷமீம், கயூம், மாத்ரு, பாபா, விஜய் போன்ற எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அஜய் முடா பசுக்களைப் பாதுகாக்கும் ஆர்வலராக இருந்து வந்துள்ளார். இருவரும் தாக்கப்பட்ட பின்பும் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அஜய் உயிரிழந்தார், சுஜீத் உயிருக்குப் போராடி வருகிறார்.
இந்த சம்பவத்தைக் கேட்டவுடன் அந்த இடத்திற்கு வந்த உள்ளூர் வாசிகள் இந்த தாக்குதலுக்குப் பின்னால் சிறுபான்மை சமூகத்தினர் உள்ளனர் மற்றும் அவர்களைக் கைது செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். செவ்வாயன்று அவர்கள் போராட்டங்களை நடத்தினர். மேலும் குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுப்போம் என்று மூத்த அதிகாரிகள் உறுதியளிக்கும் வரை அஜய் உடலைத் தகனம் செய்ய அவர்கள் மறுத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவமானது அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்காகப் பேரணி நடத்தியவர்கள் மீது முஸ்லீம் கும்பல் கல் வீச்சு நடத்திய சில சம்பவங்களுக்கு பின்னணியில் நடந்துள்ளது.