'தைரியமான சீர்திருத்த அரசு' - மத்திய அரசு குறித்து முகேஷ் அம்பானி புகழாரம்.!
'தைரியமான சீர்திருத்த அரசு' - மத்திய அரசு குறித்து முகேஷ் அம்பானி புகழாரம்.!
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகுந்த தைரியமான சீர்திருத்தங்கள் நமது நாட்டை வெகு விரைவில் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவருடைய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களைப் பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவின் விரைவான மீட்புக்கு வழிவகுக்கும் மற்றும் அடுத்த ஆண்டுகளில் விரைவான பொருளாதார முன்னேற்றம்வரும்.
எதிர்காலம் என்பது முன்னெப்போதுமில்லாத மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லரசு, பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல் என்ற இலக்கை நோக்கி இந்தியா பீடு நடை போடத் தொடங்கியுள்ளது
21-ம் நூற்றாண்டின் பாதியில் தற்போது பயன்படுத்தப்படும் ஆற்றலின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக பயன்படுத்துவோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சீர்குலைப்பதிலிருந்து தீர்வுகள் வேண்டும். குறைந்த கார்பன், கார்பன் மறுசுழற்சி தொழில்நுட்பம் இந்த இலக்கை அடைய உதவும்’ என்று தெரிவித்தார்.