தேசிய கல்விக்கொள்கை மூலம் எதிர்காலத்திற்கான கல்வி முறை உருவாகிறது - பிரதமர் மோடி பெருமிதம்

தேசிய கல்விக் கொள்கை'யின் மூலம் நாடு முதன்முறையாக முன்னோக்கிய மற்றும் எதிர்காலத்திற்கான கல்விமுறையை உருவாக்கிய வருவதாக பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-25 13:31 GMT

தேசிய கல்விக் கொள்கை'யின் மூலம் நாடு முதன்முறையாக முன்னோக்கிய மற்றும் எதிர்காலத்திற்கான கல்விமுறையை உருவாக்கிய வருவதாக பிரதமர் மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெறும் சுவாமி நாராயணன் குருகுலத்தின் 25 ஆவது அமுரத் மகா உற்சவத்தில் காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டில் உள்ள ஐ.ஐ.டி, ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

அதேபோல் மருத்துவக் கல்லூரியின் எண்ணிக்கையும் 65 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார், மேலும் பேசிய அவர் தேசிய கல்விக்கொள்கையின் மூலம் எதிர்காலத்திற்கான கல்விமுறையை உருவாக்கி வருகிறோம் என பெருமையுடன் தெரிவித்தார்.



 

Similar News