இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும்: பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்!

மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்து உரையாற்றி வருகின்றார்.

Update: 2022-02-01 06:07 GMT

மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்து உரையாற்றி வருகின்றார்.

இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பட்ஜெட் தாக்கலுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருவதாவது:

இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News